திருக்கோவிலூர் பகுதியில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி


திருக்கோவிலூர் பகுதியில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 30 May 2021 10:27 PM IST (Updated: 30 May 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் பகுதியில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி


திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 15 நாட்களாக  திடீர் திடீரென மின்தடை ஏற்படுவதும், பின்னர் மின்சாரம் வரும்போது உயர் மின்அழுத்தம் ஏற்படுவது என்ற நிலை இருந்து வருகிறது.  மின் தடையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வரும் நிலையில் உயர் மின் அழுத்தம் ஏற்பட்டு மின்சாதன பொருட்கள் பழுது அடைவது என்பது வெந்தபுண்ணில் வேலை பாய்ச்சுவது போல இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, நாள் ஒன்றுக்கு 5 முதல் 10 தடவை மின்தடை ஏற்படுகிறது. மின் வினியோகம் செய்யும் நேரத்தை விட மின்தடை நேரம்தான் அதிகம். இதற்கான காரணத்தையும் மின்சார துறை அதிகாரிகள் தெரிவிக்க மறுக்கின்றனர். எனவே பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு மின்தடை பிரச்சினைக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சீரான மின்சாரம் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிதனர்.



Next Story