இலங்கை அகதிகளுக்கு கொரோனா தடுப்பூசி


இலங்கை அகதிகளுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 30 May 2021 10:47 PM IST (Updated: 30 May 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

இலங்கை அகதிகளுக்கு கொரோனா தடுப்பூசி

திருவண்ணாமலை

திருவண்ணாமலையை அடுத்த அத்தியந்தலில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சம்பத் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டார். 

வட்டார மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி தலைமையிலான மருத்துவக்குழுவினர் இலங்கை அகதிகளுக்கு தடுப்பூசி செலுத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. 
முகாமில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சேதுராமன், ஊராட்சி மன்ற தலைவர் முருகன், செயலர் ராஜ்குமார் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story