திருப்பத்தூர் மாவட்டத்தில் 45 வயதைக் கடந்தவர்களுக்கு தடுப்பூசி போடாமல் திருப்பி அனுப்பும் அவலம்


திருப்பத்தூர் மாவட்டத்தில் 45 வயதைக் கடந்தவர்களுக்கு தடுப்பூசி போடாமல் திருப்பி அனுப்பும் அவலம்
x
தினத்தந்தி 30 May 2021 11:00 PM IST (Updated: 30 May 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் 45 வயதைக் கடந்தவர்களுக்கு தடுப்பூசி போடாமல் திருப்பி அனுப்பும் அவலம்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றில் இருந்து தங்களை காத்துக் கொள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக ஆங்காங்கே சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடும் மையங்களில் இளம்வயதினர் ஆர்வமாமக வரிசையாக நின்று தடுப்பூசி போட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 45 வயதை கடந்தவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள சென்றால் அவர்களுக்கு தடுப்பூசி இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த 4 நாட்களாக மாவட்டத்தில் 45 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி போடுவது முற்றிலும் நிறுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தடுப்பூசி போட சென்றவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்தபோது தற்போது 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு பதிவு செய்ய முடிகிறது. 45 வயதை கடந்தவர்களுக்கு பதிவு செய்ய முடியவில்லை. இதனால் அவர்களுக்கு தடுப்பூசி போட முடியவில்லை என கூறுகின்றனர். 

45 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி இருப்பு இல்லை என்று கூறி திருப்பி அனுப்புவது வேதனையாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம்  உடனடியாக அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Next Story