மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி + "||" + In the district One more killed for Corona

மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி

மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார். நேற்று ஒரே நாளில் 309 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி


130 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 20 ஆயிரத்து 520 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 16 ஆயிரத்து 412 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 129 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 
இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60-வயது ஆண் உயிரிழந்தார். இதையடுத்து மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130-ஆக உயர்ந்தது.

309 பேருக்கு தொற்று

இந்தநிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 980 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் 309 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 520-ல் இருந்து 20 ஆயிரத்து 829-ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 ஆயிரத்து 287 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மேலும் ஒருவர் பலி
மஞ்சுவிரட்டில் காயம் அடைந்தவர்களில் மேலும் ஒருவர் பலியானார்.