மாவட்ட செய்திகள்

சாராயம் குடித்த 2 பேர் சாவு + "||" + Death of 2 people who drank alcohol

சாராயம் குடித்த 2 பேர் சாவு

சாராயம் குடித்த 2 பேர் சாவு
மயிலாடுதுறையில் சாராயம் குடித்த 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் சாராயம் குடித்த 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 
சாராயம் குடித்த 2 பேர் சாவு
மயிலாடுதுறை மாவட்டம்  சேந்தங்குடி தென்பாதி தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவருைடய மகன் பிரபு(வயது33). இவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறி நேற்று முன்தினம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டரிடம், கடந்த 27-ந் தேதி சாராயம் குடித்ததாகவும், அன்று முதல் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், கண்கள் சரியாக தெரியவில்லை என்றும் பிரபு கூறினார். 
கொரோனா பரிசோதனை 
மேலும் பிரபுவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை பரிசோதனை செய்ததில் பிரபுவுக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பிரபு நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதைப்போல பிரபுவிடம் சாராயம் வாங்கி குடித்த சேர்ந்தங்குடி குப்பங்குளம் மேல்கரை தெருவை சேர்ந்த செல்வம் (42) என்பவர் ேநற்று பரிதாபமாக இறந்தார்.
மருத்துவமனையில் அனுமதி
இந்தநிலையில் பிரபுவிடம் சாராயம் வாங்கி குடித்த சேந்தங்குடி பகுதியை சேர்ந்த வீராசாமி (52), சரண்ராஜ் (32), செந்தில் (40), சரத்குமார் (28) ஆகிய 4 பேரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்ைசக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார்கள். சாராயம் குடித்த 2 பேர் உயரிழந்த சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.