அன்னவாசலில் போலீசாருக்கு மதிய உணவு வழங்கிய தன்னார்வலர்கள்
போலீசாருக்கு மதிய உணரவ தன்னார்வலர்கள் வழங்கினர்.
அன்னவாசல்:
அன்னவாசலில் கொரோனா காலத்தில் பொதுமக்களை காக்க தங்கள் உயிரை பணையம் வைத்து காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார்களுக்கு மதிய உணவை தன்னார்வலர்கள் வழங்கினார். தமிழகமெங்கும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது. இதை தடுக்கும் வகையில், மேலும் ஒரு வாரம் தளர்வு இல்லா ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் தங்கள் உயிரை பணையம் வைத்து பொதுமக்களை காக்கும் வகையில் காவல் பணியில் போலீசார்ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அன்னவாசல் போலீசாருக்கு தன்னார்வலர்கள் புதுக்கோட்டை தாஜ்கஹால் ஹாஜி உபைத்துல்லா, ஆடிட்டர் ஹாஜிஇப்ராஹீம் கலிபுல்லா ஆகியோர் அன்னவாசல் அப்துல்அலி மூலம் மதிய உணவுகளை வழங்கினார்கள். மக்களின் உயிரைக் காக்க கொரோனா காலத்தில் பணியாற்றும் போலீசார்களை மதிக்கும் வகையில் மதிய உணவு வழங்கிய தன்னார்வலர்களை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story