திமுக சார்பில் உணவு பொருள் தொகுப்பு முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கோவை மாவட்டத்தில் 10 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தி.மு.க. சார்பில் இலவச உணவு பொருள் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கோவை
கோவை மாவட்டத்தில் 10 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தி.மு.க. சார்பில் இலவச உணவு பொருள் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
உணவு தொகுப்பு
கொரோனா முதல் அலையின் போது தி.மு.க சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. தற்போது 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது.
இந்த நிலையில் கோவை மாவட்ட ஒருங்கிணைந்த தி.மு.க சார்பில் மாவட்டத்தில் உள்ள 10 லட்சத்து 17 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர் களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை, மஞ்சள், டீத்தூர், உப்பு ஆகிய 7 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய உணவு தொகுப்பு திட்டம் வழங்கும் நிகழ்ச்சியின் தொடக்க விழா கோவையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நடந்தது.
மு.க.ஸ்டாலின் வழங்கினார்
இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். "கொரோனாவை தடுக்க ஒன்றிணைவோம்" என்ற தி.மு.க. திட்டத்தின்படி இந்த உணவு தொகுப்பை முன் களப்பணியாளர்கள் 300 பேருக்கு மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அர.சக்கரபாணி, ராமச்சந்திரன், கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், சேனாதிபதி, மற்றும் தி.முக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story