தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் 1026 ஆக அதிகரிப்பு


தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் 1026 ஆக அதிகரிப்பு
x

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் 1026 ஆக அதிகரிப்பு

கோவை

கோவை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1,026 ஆக அதிகரித்து உள்ளது. இதில் மதுக்கரையில் தொற்று பாதிப்பு கூடுதலாக இருக்கிறது.

கொரோனா தொற்று

கோவையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கொரோனா தொற்று உள்ளவர்களின் வீடுகள் தகரம் வைத்து அடைக்கப்படுகிறது. 


அதிக தொற்று பாதிப்பு இருந்தால் தெருக்கள் அடைக்கப்பட்டு தனி மைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது.

அதன்படி கோவை மாவட்டத்தில் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1,026 ஆக அதிகரித்து உள்ளது. இதில் கோவை மாநகராட்சியில் மட்டும் 710 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. 

இது குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது

3 பேருக்கு மேல் பாதிப்பு

மாநகராட்சியில் 3 பேருக்கு மேல் தொற்று பாதிப்பு உள்ள தெருக்கள் தனிமைப்படுத்தப்படுகிறது. 3 பேருக்கு கீழ் பாதிப்பு உள்ள தெருக்களில் சம்பந்தப்பட்ட வீடுகள் மட்டும் அடைக்கப்பட்டு நோட்டீஸ் ஒட்டப் படுகிறது. அங்கு தினமும் 3 வேளை கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.


ஊரக பகுதிகளை பொருத்தவரை மதுக்கரை வட்டாரத்தில் தான் தொற்று பாதிப்பு அதிகம் உள்ளது. இங்கு மாநகராட்சிக்கு அடுத்தப்படி யாக 72 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. 

சூலூரில் 21, துடி யலூரில் 41, தொண்டாமுத்தூரில் 16, பொள்ளாச்சி தெற்கில் 7, காரமடையில் 32, எஸ்.எஸ்.குளத்தில் 32, ஆனைமலையில் 5, பொள் ளாச்சி வடக்கில் 2, கிணத்துக்கடவில் 1, அன்னூரில் 21 தனிமைப்படுத் தப்பட்ட பகுதிகள் உள்ளன.
நகராட்சிகள்

நகராட்சிகளை பொருத்தவரை பொள்ளாச்சியில் 63, மேட்டுப்பாளையத்தில் 26 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. அந்த பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. அங்கு வசிப்பவர்கள் வெளியே செல்லவோ அல்லது வெளி நபர்கள் அந்த பகுதிக்கு செல்லவோ அனுமதி இல்லை.

வால்பாறை நகராட்சி மற்றும் சுல்தான்பேட்டை வட்டாரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.


Next Story