மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 9 பேர் பலி + "||" + Corona

மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 9 பேர் பலி

மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 9 பேர் பலி
மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 9 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கரூர்
488 பேருக்கு தொற்று
 தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும்பொருட்டு தளர்வில்லாத ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.   இதன் காரணமாக ஓரிரு மாவட்டங்களில் தொற்று குறைந்து வருகிறது என்றாலும் கொரோனாவுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 488  பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 பேர் பலி 
அவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 339 பேர் குணமடைந்ததால் அவர்கள் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆனால், நேற்று ஒரேநாளில் சிகிச்சை பலனின்றி 9 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போதைய நிலவரப்படி 3,539 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மேலும் 597 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 597 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
2. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் சாவு புதிதாக 330 பேருக்கு தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் இறந்தனர். புதிதாக 330 பேருக்கு தொற்று உறுதியானது.
3. ஒரே நாளில் 211 பேருக்கு கொரோனா; குணம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 211 பேருக்கு கொரோனா ெதாற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. குணம் அடைந்தோரின் எண்ணிக்கை பாதிப்பை காட்டிலும் அதிகரித்து உள்ளது.
4. விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 7 பேர் பலி
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 7 பேர் பலியானார்கள். மேலும் 619 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் தாமாக முன்வந்து போட வேண்டும்: ஊரடங்கு எதிரொலியாக கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்று படிப்படியாக குறைவு
ஊரடங்கு எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதாக வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.