ஆதவற்றோருக்கு உணவு வழங்கி வரும் சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு
ஆதவற்றோருக்கு உணவு வழங்கி வரும் சமூக ஆர்வலர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
குளித்தலை
கொரோனா ஊரடங்கு காரணமாக குளித்தலை பகுதியில் உள்ள கடைகள் அனைத்து மூடப்பட்டுள்ளன. இதனால் குளித்தலை பகுதியில் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிபவர்கள் மற்றும் கூலி வேலைக்கு சென்று தங்கள் குடும்பத்தை நடத்தி வருபவர்கள் உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர். இந்தநிலையில் குளித்தலை பகுதியில் உள்ள தனியார் அறக்கட்டளை மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் உணவின்றி தவித்து வரும் சாலையோரங்களிலும், கோவில்வளாகம் போன்ற பகுதிகளில் தங்கிவரும் ஆதரவற்றோர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு தினந்தோறும் உணவளித்து வருகின்றனர். இதுபோன்று பொதுநலநோக்குடன் உணவு வழங்கும் அவர்களது பணியை பொதுமக்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story