வைக்கோல் ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்தது


வைக்கோல் ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்தது
x
தினத்தந்தி 31 May 2021 12:14 AM IST (Updated: 31 May 2021 12:14 AM IST)
t-max-icont-min-icon

சேத்தூர் அருகே வைக்கோல் ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்தது.

தளவாய்புரம், 
சேத்தூர் அருகே அசையா மணி விளக்கு பகுதியில் விவசாயிகள் தற்போது நெற்பயிரை அறுவடை செய்து வருகின்றனர். இதில் எஞ்சியிருக்கும் வைக்கோலை  இங்குள்ள விவசாயிகள் மாட்டுத்தீவனமாக கேரளா பகுதிக்கு லாரி மூலம் அனுப்புவது வழக்கம். இந்த நிலையில் நேற்று கேரளா மாநிலம் தென்மலை பகுதியைச் சேர்ந்த சுசி (வயது 45) என்பவர் லாரியில் வைக்கோல்களை ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு புறப்பட்டார். அப்போது சிறிது தூரம் லாரி சென்றவுடன் சாலையோரம் இருந்த மின்சார வயர் வைக்கோல் மீது உரசி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனையறிந்த லாரி டிரைவர் உடனே கீழே இறங்கி உயிர் தப்பினார். இதுபற்றி தளவாய்புரம் போலீசாருக்கும், ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து நிலைய அதிகாரி ஜெயராம் தலைமையில் தீயணைப்புபடை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் லாரி மற்றும் வைக்கோல் முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் சேத மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுபற்றி தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வீக பெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story