விருதுநகரில் இன்று மின்தடை


விருதுநகரில் இன்று மின்தடை
x
தினத்தந்தி 31 May 2021 12:17 AM IST (Updated: 31 May 2021 12:17 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணிகளுக்காக விருதுநகர் பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர், 
விருதுநகரில் மின்பாதை பராமரிப்பு பணிகள் இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை பாண்டியன் நகர், முத்தால் நகர், கருப்பசாமி நகர், எல்.பி.எஸ். நகர், ஸ்டேட் பாங்க் காலனி, ஐ.சி.ஏ. காலனி, கால்நடை மருத்துவமனை சாலை, லிங்க் ரோடு, பால்பண்ணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும். அதேபோல   காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அல்லம்பட்டி, முத்துராமன்பட்டி, வரலொட்டி, வில்லிபத்திரி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை கட்டயாபுரம், சாத்தூர் ரோடு, பழைய சிவகாசி ரோடு, நிறைவாழ்வு நகர், வி.வி.ஆர். கல்குவாரி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.

Next Story