அம்பை, விக்கிரமசிங்கபுரம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம்


அம்பை, விக்கிரமசிங்கபுரம் பகுதியில்  கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 30 May 2021 6:56 PM GMT (Updated: 30 May 2021 6:56 PM GMT)

அம்பை, விக்கிரமசிங்கபுரம் பகுதியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது

அம்பை:
அம்பை, விக்கிரமசிங்கபுரம் பகுதியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.

கொரோனா தடுப்பூசி

அம்பை யூனியன் வாகைகுளம் பஞ்சாயத்தில் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. அம்பை யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணி, விஜயா செல்வி ஆகியோர் தலைமை தாங்கினர். 

வட்டார மண்டல மருத்துவ அலுவலர் பிரவீன்குமார், டாக்டர் பழனி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டனர். இதில் சுகாதார ஆய்வாளர் பழனி, வாகைகுளம் பஞ்சாயத்து செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அம்பையில் நடந்த முகாமுக்கு தாசில்தார் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் பார்கவி முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ் முகாமை நடத்தினார். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் நாகூர், செவிலியர்கள் சிதம்பரம்மாள், ராதா, தங்கராணி, பசுமதி, இந்திரா ஆகியோர் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட்டனர். 

விக்கிரமசிங்கபுரம்

விக்கிரமசிங்கபுரத்தில் நடந்த தடுப்பூசி போடும் முகாமுக்குஅரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மணிகண்டன் தலைமை தாங்கினார். விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் கணேசன் முன்னிலை வகித்தார். இதில் நகராட்சி ஆணையாளர் காஞ்சனா கலந்துகொண்டு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். 

சிவந்திபுரம் ஊராட்சி கஸ்பா சமுதாய நலக்கூடத்தில், அகஸ்தியர்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. தாசில்தார் வெங்கட்ராமன் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். அகஸ்தியர்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பிரபுல், வட்டார வளர்ச்சி அலுவலர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. 

முகாமில் இளைஞர்கள் ஆர்வமாக வந்த தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஊராட்சி செயலாளர் வேலு, கிராம உதவியாளர் அனிஸ்பாத்திமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பணகுடி

வள்ளியூர் வட்டார அரசு மருத்துவர் கோலப்பன் மேற்பார்வையில் பணகுடி, வள்ளியூர், வடக்கன்குளம் அரசு மருத்துவமனைகள், சுற்றுவட்டாரத்தில் உள்ள 6 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மகேந்திரகிரி ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேற்படி இடங்களில் தினமும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. தகுதி உடையவர்கள் மேற்படி இடங்களில் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு வட்டார அரசு மருத்துவர் கோலப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story