தனியார் பள்ளி வளாகத்தில் 200 படுக்கைகளுடன் சிகிச்சை மையம்
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி அருகே தனியார் பள்ளி வளாகத்தில் 200 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக கலெக்டர் கண்ணன் தெரிவித்தார்.
விருதுநகர்,
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி அருகே தனியார் பள்ளி வளாகத்தில் 200 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக கலெக்டர் கண்ணன் தெரிவித்தார்.
நடவடிக்கை
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தவும், உயிரிழப்புகளை தடுப்பதற்கும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி தினமும்ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு அதன் மூலம் நோய் பாதிப்பு உள்ளவர்களை கண்டறிந்து அவற்றின் தன்மைக்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்திற்கு தேவையான ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை மையம்
இந்தநிலையில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி அருகே தனியார் பள்ளி வளாகத்தில் 200 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த சிகிச்சை மையத்தில் ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் ஆண், பெண் இருபாலரும் தனித்தனியாக சிகிச்சை பெற தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் மையத்தில் ஆய்வகம், மருந்தகம், தகுதி வாய்ந்த சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள், நவீன சிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விரைவில் பயன்பாட்டிற்கு வரும்
இதற்கான பணிகள் வேகமாக முடிக்கப்பட்டு விரைவில் இந்த மையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன், மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பழனி குமார், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story