மானூர் அருகே சாராயம் காய்ச்சி விற்ற 5 பேர் கைது
மானூர் அருகே சாராயம் காய்ச்சி விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மானூர்:
மானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மானூர் பெரியகுளம் கரை பகுதியில் சாராயம் விற்று கொண்டிருந்த மானூரைச் சேர்ந்த பிரணீஷ் (வயது 38), திருமலாபுரத்தை சேர்ந்த பெரியசாமி (37) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 லிட்டர் சாராயம் மற்றும் ரூ.1,000-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் கைதான 2 பேரும் அளித்த தகவலின்பேரில், மானூர் அருகே மடத்தூர் காட்டு பகுதியில் சாராயம் காய்ச்சி கொண்டிருந்த மடத்தூரைச் சேர்ந்த மார்ட்டின் (35), மானூரைச் சேர்ந்த முத்துகுமார் (32), ஈசாக்கு (37) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த சாராய ஊறலையும் அழித்தனர்.
Related Tags :
Next Story