தடையின்றி காய்கறி வினியோகம் செய்ய சிறப்பு ஏற்பாடு
ராஜபாளையம் பகுதியில் தடையின்றி காய்கறி வினியோகம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் பகுதியில் தடையின்றி காய்கறி வினியோகம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தடையின்றி காய்கறி
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் ராஜபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் தடையின்றி காய்கறிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக 35 மெட்ரிக் டன் காய்கறிகள் ராஜபாளையம் அன்னப்பராஜா பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மொத்த காய்கறி சந்தைக்கு வரவழைக்கப்பட்டது. பின்னர் 70-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் இந்த காய்கறி மூடைகள் அனுப்பி வைக்கப்பட்டது.
70 வாகனங்கள்
வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை வணிகத்துறை, மகளிர் சுய உதவி குழுக்கள், நகராட்சி மற்றும் உள்ளூர் வணிகர்கள் இணைந்து நடமாடும் காய்கறி வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை நகரம் மற்றும் கிராமங்களில் உள்ள மக்களுக்கு தேவையான பகுதிகளில் கொண்டு செல்வதற்காக 70-க்கும் மேற்பட்ட மினி வேன் மற்றும் ஆட்டோக்கள், தள்ளுவண்டி ஆகியவற்றிற்கு பாஸ் வழங்கப்பட்டு நடமாடும் காய்கறி விற்பனை நிலையம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் ராஜபாளையம் பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியாவதி, நகராட்சி ஆணையாளர் சுந்தராம்பாள், தோட்டக்கலை உதவி இயக்குனர் கலைவாணி, உதவி தோட்டக்கலை அலுவலர் பாலமுருகன், வேளாண்மை அலுவலர் தனலட்சுமி, துணை வேளாண்மை அலுவலர் விநாயகமூர்த்தி, துணை வேளாண்மை அலுவலர் மலைச்சாமி, உதவிவேளாண்மை அலுவலர்கள் சுரேஷ், பாலகுரு மற்றும் வெங்கடாசலம், நகராட்சி வருவாய் அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story