தேவையின்றி சுற்றித்திரிந்த 12 பேர் மீது வழக்கு


தேவையின்றி சுற்றித்திரிந்த 12 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 31 May 2021 12:55 AM IST (Updated: 31 May 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

போலீசார் வாகன சோதனை நடத்தி, தேவையின்றி சுற்றித்திரிந்த 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் வந்தவர்களின் இருசக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். இதில் உடையார்பாளையத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்(வயது 28), ராம்குமார்(24), ராமு(24), தா.பழூரைச் சேர்ந்த கரண்(26) உள்ளிட்ட 12 பேர் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி ேதவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து 12 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Next Story