கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை-கலெக்டர் நேரில் ஆய்வு


கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை-கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 31 May 2021 12:56 AM IST (Updated: 31 May 2021 12:56 AM IST)
t-max-icont-min-icon

ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் சென்று பார்வையிட்டார்.

சிவகங்கை,

ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் சென்று பார்வையிட்டார்.

கொரோனா பரவல் அதிகரிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து சிவகங்கையில் உள்ள மருத்துவகல்லுாரி மருத்துவமனை தவிர மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் தொடங்கபட்டன.
மேலும் அந்ததந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டன. இவைகளில் அந்தந்த பகுதி நோயாளிகளுக்கு நோயின் தன்மையை பொறுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதிக நோய் தொற்று உள்ளவர்கள் மட்டும் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் சென்று உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா? நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் உள்ளதா? என்ற ஆய்வு நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கீழப்பூங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேற்று அங்கு சென்று பார்வையிட்டார்,
பின்னர் அங்கிருந்த டாக்டர்களிடம் கலெக்டர் கூறும் போது, போதியளவு ஆக்சிஜன் சிலிண்டர்களை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மூலம் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே அதை பெற்று தயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது ஊராட்சிகள் உதவி இயக்குனர் சண்முகம், வட்டார மருத்துவ அலுவலர் பார்த்தசாரதி ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story