தா.பழூர், உடையார்பாளையம் பகுதிகளில் மழை


தா.பழூர், உடையார்பாளையம் பகுதிகளில் மழை
x
தினத்தந்தி 31 May 2021 1:02 AM IST (Updated: 31 May 2021 1:02 AM IST)
t-max-icont-min-icon

தா.பழூர், உடையார்பாளையம் பகுதிகளில் மழை பெய்தது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியில் கடும் வெப்பம் வாட்டி வதைத்து வந்தது. நேற்று முன்தினத்துடன் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பிறகும் கோடை வெப்பத்தின் தாக்கம் குறையாமல் இருந்தது. இந்நிலையில் தா.பழூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணி முதல் இரவு வரை விட்டுவிட்டு மிதமான மழை பெய்தது. அப்போது காற்றும் வீசியது. மழை காரணமாக பூமி குளிர்ந்தது, மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதேபோல் உடையார்பாளையத்தில் பலத்த மழை பெய்தது. மேலும் சுற்றுப்புற பகுதிகளான விளாங்குடி, ஆதிச்சனூர், சுத்தமல்லி, மணகதி, வெண்மான்கொண்டன், தத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. 

Related Tags :
Next Story