சிங்கம்புணரி,
சிங்கம்புணரி தாலுகாவுக்கு உட்பட்ட அரளிக்கோட்டை ஊராட்சியில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ெபாதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி கபசுர குடிநீர் பெற்றுக்ெகாண்டனர். 1,500 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன், கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் ரத்தினவேல், ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி காளிதாஸ், தெற்கு ஒன்றிய செயலாளர், பாலசுப்பிரமணியன், துணை செயலாளர் முத்துக்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.