பேட்டையில் வீட்டில் சாராயம் காய்ச்ச முயன்ற 3 பேருக்கு வலைவீச்சு
வீட்டில் சாராயம் காய்ச்ச முயன்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பேட்டை:
நெல்லை பேட்டை எம்.ஜி.ஆர். நகர் கருமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக நெல்லை டவுன் உதவி போலீஸ் கமிஷனா் சதீஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த வீட்டில் இருந்தவர்கள், போலீசார் வருவதைக் கண்டவுடன் தப்பி ஓடி விட்டனர்.
இதையடுத்து அந்த வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது, அங்கு சாராயம் காய்ச்சுவதற்கு தேவையான பாத்திரங்கள், பொருட்களை தயாராக வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் அங்கு அரிவாள், கத்தி, வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் இருந்தன. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பேட்டை போலீசார், தலைமறைவான பேட்டை எம்.ஜி.ஆர். நகர் கருமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அய்யாதுரை மகன் நல்லமுத்துகுமார் உள்ளிட்ட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story