நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்ததாக புகார்: 3 மருந்து கடைகளுக்கு ‘சீல்’


நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்ததாக புகார்: 3 மருந்து கடைகளுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 31 May 2021 3:34 AM IST (Updated: 31 May 2021 3:34 AM IST)
t-max-icont-min-icon

3 மருந்து கடைகளுக்கு ‘சீல்’

பெத்தநாயக்கன்பாளையம்:
பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பனைமடல் பகுதியில் கொரோனாவால் 10-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தனர். இந்த பகுதியில் உள்ள மருந்து கடைகள், ரத்த பரிசோதனை மையங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மருத்துவ அலுவலர் சங்கர், பெத்தநாயக்கன்பாளையம் துணை தாசில்தார் நல்லுசாமி, வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பனைமடல் பகுதியில் உள்ள மருந்து கடைகளில் திடீரென சோதனை நடத்தினர். 
இந்த சோதனையின் போது அங்குள்ள 3 மருந்து கடைகள் மற்றும் ரத்த பரிசோதனை நிலையம் ஒன்றில், பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்ததற்கான ஆதாரங்களை குழுவினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த 3 மருந்து கடைகள் மற்றும் ரத்த பரிசோதனை நிலையத்திற்கு பூட்டி சீல் வைத்ததுடன், அதன் உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். 

Next Story