மாவட்ட செய்திகள்

ஏற்காட்டில்தனியார் தங்கும் விடுதியில் திடீர் ‘தீ’ + "||" + Sudden fire in private hostel

ஏற்காட்டில்தனியார் தங்கும் விடுதியில் திடீர் ‘தீ’

ஏற்காட்டில்தனியார் தங்கும் விடுதியில் திடீர் ‘தீ’
தனியார் தங்கும் விடுதியில் திடீர் ‘தீ’
ஏற்காடு:
ஏற்காடு வண்டிக்கடை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்று எதிர்பாராத விதமாக திடீரென தீப்பற்றி எரிந்தது. ஊரடங்கு காரணமாக அங்கு யாரும் இல்லாத நிலையில், இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 
இருப்பினும் அங்கிருந்த மெத்தைகள், மெத்தை விரிப்புகள் ஆகியவை எரிந்து சேதம் அடைந்தது. தகவல் அறிந்து அங்கு வந்த ஏற்காடு தீயணைப்பு படையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.