மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டத்தில்புதிதாக 1,295 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Corona affected 1,295 new people

சேலம் மாவட்டத்தில்புதிதாக 1,295 பேருக்கு கொரோனா பாதிப்பு

சேலம் மாவட்டத்தில்புதிதாக 1,295 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதிதாக 1,295 பேருக்கு கொரோனா பாதிப்பு
சேலம்:
சேலம் மாவட்டத்தில் புதிதாக 1,295 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 17 பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக நேற்று முன்தினம் 1,492 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதேபோல் கொரோனா பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 
இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் புதிதாக 1,295 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 390 பேர், ஓமலூரில் 73 பேர், வாழப்பாடியில் 79 பேர், சங்ககிரியில் 66 பேர், எடப்பாடியில் 62 பேர், ஆத்தூரில் 54 பேர், வீரபாண்டியில் 42 பேர், சேலம் ஒன்றிய பகுதியில் 54 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 47 பேர், நங்கவள்ளியில் 44 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 43 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
மேலும் மகுடஞ்சாவடியில் 39 பேர், தாரமங்கலத்தில் 39 பேர், ஆத்தூர் நகராட்சி பகுதியில் 38 பேர், மேட்டூர் நகராட்சி பகுதியில் 36 பேர், பனமரத்துப்பட்டியில் 32 பேர், கெங்கவள்ளியில் 30 பேர், தலைவாசலில் 26 பேர், காடையாம்பட்டியில் 26 பேர், கொளத்தூரில் 25 பேர், கொங்கணாபுரத்தில் 12 பேர், மேச்சேரியில் 15 பேர், ஏற்காட்டில் 13 பேர், நரசிங்கபுரம் நகராட்சியில் 10 பேருக்கும் கொரோனா நோய் தொற்று இருந்தது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. 
இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 454 ஆக அதிகரித்துள்ளது. 
17 பேர் பலி
அதேநேரத்தில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 782 பேர் குணமடைந்து விட்டதால் நேற்று அவர்கள் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து 8 ஆயிரத்து 96 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 17 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 950 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புதிதாக 1,005 பேருக்கு வைரஸ் தொற்று கர்நாடகத்தில் 28 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு இல்லை
கர்நாடகத்தில் 28 மாவட்டங்களில் நேற்று கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை. மாநிலத்தில் புதிதாக 1,005 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2. கர்நாடகத்தில் புதிதாக 1,143 பேருக்கு கொரோனா - சுகாதாரத்துறை தகவல்
கர்நாடகத்தில புதிதாக 1,143பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் நேற்றைய பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-