மாவட்ட செய்திகள்

பர்கூர் அருகே விவசாயியை தாக்கியவர் கைது + "||" + one person arrested

பர்கூர் அருகே விவசாயியை தாக்கியவர் கைது

பர்கூர் அருகே விவசாயியை தாக்கியவர் கைது
பர்கூர் அருகே விவசாயியை தாக்கியவர் கைது.
பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 20). இவர் பர்கூர் ஜெகதேவி பகுதியை சேர்ந்த அன்பு (23) மற்றும் அவர்களது நண்பர்களுடன் ஏ.நாகமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே கடந்த 28-ந் தேதி கிரிக்கெட் விளையாடினார். அப்போது ஏ.நாகமங்கலத்தை சேர்ந்த விவசாயி பழனிகுமார் (41) மற்றும் கிராமத்தினர் விளையாடி கொண்டிருந்தவர்களிடம் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கூட்டமாக சேர்ந்து விளையாடுகிறீர்களே என்று கேட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ் மற்றும் அன்பு உள்ளிட்டோர் கற்கள் மற்றும் கட்டைகள் கொண்டு பழனிகுமார் உள்ளிட்டோரை தாக்கினார்கள். இதில் படுகாயமடைந்த பழனிகுமார் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பர்கூர் போலீசார் அன்புவை கைது செய்தனர். வெங்கடேசை தேடி வருகிறார்கள்.
======

தொடர்புடைய செய்திகள்

1. பர்கூர் அருகே தம்பதியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது
பர்கூர் அருகே தம்பதியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது
2. பர்கூர் அருகே சொத்து தகராறில் எலக்ட்ரீசியன் அடித்துக்கொலை
பர்கூர் அருகே சொத்து தகராறில் எலக்ட்ரீசியன் அடித்துக்கொலை