தாமரைகுளத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா
தாமரைகுளத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு,
கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 400-ஐ தாண்டியுள்ளது. இதில் 74-க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் நல்லட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தாமரைகுளம் நாயக்கர் காலனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த பகுதியை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா, மண்டல துணை தாசில்தார் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் ராமராஜ் மற்றும் அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும் நாயக்கர் காலனி பகுதியில் சுகாதாரத்துறை ஆய்வாளர் குணசேகரன் மேற்பார்வையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தொடா்ந்து நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதாரநிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ரா உத்தரவின்பேரில் டாக்டர் திலீப்குமார் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story