அரூர் பகுதியில் சாராயம் விற்ற 7 பேர் கைது
அரூர் பகுதியில் சாராயம் விற்ற 7 பேர் கைது.
அரூர்,
அரூரில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்வது, சாராயம் காய்ச்சி விற்பது போன்ற செயல்கள் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் அரூர் பகுதியில் நேற்று போலீஸ் துணை சூப்பிரண்டு தமிழ்மணி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், ரவி உள்பட போலீசார் கோம்பூர், ஊத்துக்குளி, கலசபாடி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது சாராயம் காய்ச்சி விற்பனை செய்த அண்ணாமலை (வயது 56), பரமசிவம் (55), விஜயகுமார் (38), கிருஷ்ணன் (48), அஜித்குமார் (23), வேடன் (48) மற்றும் முருகன் (27) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
=======
Related Tags :
Next Story