தெற்கு ரெயில்வே மூலம் தமிழகம், கேரளாவுக்கு 2,200 டன் ஆக்சிஜன் வினியோகம்
தெற்கு ரெயில்வே மூலம் தமிழகம், கேரளாவுக்கு 2,200 டன் ஆக்சிஜன் வினியோகம்.
சென்னை,
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, ஆக்சிஜன் தேவை தமிழகத்துக்கு அதிகரித்தது. இதையடுத்து தமிழக அரசு தெற்கு ரெயில்வேயின் உதவியுடன் வடமாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் ஆக்சிஜன் கொண்டு வர திட்டமிட்டது.
அதன்படி கடந்த 14-ந்தேதி தமிழகத்துக்கு மேற்கு வங்காளத்தில் இருந்து ஆக்சிஜன் டேங்கர்களுடன் முதல் ரெயில் சென்னை வந்தது. இதையடுத்து தொடர்ந்து ஜார்கண்ட், மராட்டியம், ஒடிசா மாநிலங்களில் தமிழகத்தின் சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆக்சிஜன் கொண்டு வரப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று 31-வது ஆக்சிஜன் ரெயில் மராட்டிய மாநிலம் டோல்வியில் இருந்து சென்னை தண்டையார்பேட்டைக்கு வந்தது. இதில் 80.44 டன் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது. சென்னை தண்டையார் பேட்டை பணிமனைக்கு, இதுவரை 22 முறை ரெயில் மூலம் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது.
அந்தவகையில் தமிழகத்துக்கு இதுவரை 1887.62 டன் ஆக்சிஜனும், கேரளாவுக்கு இதுவரை 380.2 டன் ஆக்சிஜனும் என தெற்கு ரெயில்வே இதுவரை ரெயில் மூலம் 2,267.82 டன் ஆக்சிஜன் வினியோகம் செய்துள்ளது.
மேற்கண்ட தகவல்கள் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story