மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 வாலிபர்கள் கைது


மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 31 May 2021 11:09 AM IST (Updated: 31 May 2021 11:09 AM IST)
t-max-icont-min-icon

மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 வாலிபர்கள் கைது.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் வேலகாபுரம் கிராமத்தில் உள்ள வெங்கல்-சீத்தஞ்சேரி நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஊத்துக்கோட்டையில் இருந்து போந்தவாக்கம், மாம்பாக்கம் வழியாக வேலகாபுரம் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால், அந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் நிறுத்துவதைபோல் பாவனை காட்டிவிட்டு மின்னல் வேகத்தில் சென்றனர்.

அவர்களை போலீசார் விரட்டி சென்று மடக்கிப் பிடித்தனர். மேலும், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் 51 மதுபாட்டில்கள், 15 பீர் பாட்டில்கள் என மொத்தம் 66 மது பாட்டில்களை கடத்திச் சென்றதை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர்.

அவர்கள் விசாரணை செய்ததில், திருநின்றவூர் அருகே உள்ள பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 22), நத்தம்பேடு கிராமத்தைச் சேர்ந்த சேது (20), வெங்கல் அருகே உள்ள பேரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வசந்து (21) என்பது தெரியவந்தது. போலீசார் குற்றவாளிகள் 3 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story