தகிசர்- ஆரேகாலனி இடையே மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்; முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொடங்கி வைக்கிறார்


தகிசர்- ஆரேகாலனி இடையே மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்; முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 31 May 2021 3:16 PM IST (Updated: 31 May 2021 3:18 PM IST)
t-max-icont-min-icon

தகிசர்- ஆரேகாலனி இடையே மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டத்தை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இன்று தொடங்கி வைக்கிறார்.

மெட்ரோ ரெயில் திட்டம்
மும்பையில் தகிசர்- ஆரேகாலனி (மெட்ரோ 2ஏ), தகானுகர்வாடி - ஆரேகாலனி (மெட்ரோ -7) ஆகிய மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்தின் முதல் கட்ட பணிகள் அக்டோபர் மாதம் முடிவடையும் என மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம் அறிவித்து உள்ளது.இதேபோல அனைத்து பணிகளும் முடிந்து இந்த வழித்தடத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவித்து உள்ளது.

சோதனை ஓட்டம்
இதற்கிடையே இந்த 2 வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் இன்று (திங்கட்கிழமை) தொடங்கும் என எம்.எம்.ஆர்.டி.ஏ. தலைமை அதிகாரி ஆர்.ஏ. ராஜூவ் கூறினார். இந்தநிலையில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டத்தை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொடங்கி இன்று வைக்கிறார். இந்த நிகழ்ச்சி அகுர்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடக்கிறது. மும்பையில் தற்போது காட்கோபர்- அந்தேரி- வெர்சோவா இடையே மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

Next Story