போலீசார், தூய்மை பணியாளர்களுக்கு இலவசமாக முட்டை வழங்கும் என்ஜினீயரிங் பட்டதாரி
கோவில்பட்டியில் போலீசார், தூய்மை பணியாளர்களுக்கு என்ஜினீயரிங் பட்டதாரி இலவசமாக முட்டை வழங்கி வருகிறார்.
கோவில்பட்டி, ஜூன்:
கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையில் முட்டை மொத்த வியாபாரம் செய்து வருபவர் என்ஜினீயரிங் பட்டதாரி இளைஞரான விக்னேஷ். இவர் கொரோனா காலத்தில் பணியாற்றி வரும் போலீசார், தூய்மை பணியாளர்களுக்கு வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒவ்வொருவருக்கும் இரண்டு முட்டை மற்றும் குடிநீர் பாட்டில் வழங்க முடிவு செய்தார். அதன்படி கோவில்பட்டி நகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து போலீசாருக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் விக்னேஷ் மற்றும் அவரது தந்தை இந்திய கலாசார நட்புறவு கழகத்தின் மாநில செயலாளர் தமிழரசன் இருவரும் முட்டை மற்றும் குடிநீர் பாட்டில்களை வழங்கினர். மேலும் தொடர்ந்து முட்டையுடன் சுண்டல் வழங்கும் முயற்சி செய்து வருவதாக விக்னேஷ் தெரிவித்துள்ளார். இவரின் முயற்சியை அனைவரும் பாராட்டினர்.
Related Tags :
Next Story