மாவட்ட செய்திகள்

1,373 பேருக்கு கொரோனா + "||" + corona

1,373 பேருக்கு கொரோனா

1,373 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று 4-வது நாளாக குறைய தொடங்கிய நிலையில் நேற்று 1,373 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று 4-வது நாளாக குறைய தொடங்கிய நிலையில் நேற்று 1,373 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 
1,373 பேருக்கு கொரோனா
கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று குறைய தொடங்கியது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 4-வது நாளாக கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 1,373 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை முடிவுகள் வரும் வரை இவர்களையும் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 
12 பேர் பலி
மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 60 ஆயிரத்து 947-ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 1,112 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 177-ஆக உள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 ஆயிரத்து 295 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 12 பேர் பலியாகினர். இதில் 7 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் அடங்குவர். பலி எண்ணிக்கை தற்போது 475-ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று  4-வது நாளாக கொரோனா தொற்று குறைந்து வருவது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. 1,843 பகுதிகள் கொரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலங்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1843 பகுதிகள் கொரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
2. கழிவறையில் பதுக்கி வைத்த 1,162 மது பாட்டில்கள் பறிமுதல்
மார்த்தாண்டம் அருகே கழிவறையில் பதுக்கி வைத்திருந்த 1,162 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய பார் உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3. 1,500 டோஸ் கோவேக்சின் தடுப்பூசி மருந்து வந்தது
குமரி மாவட்டத்துக்கு 1500 டோஸ் கோவேக்சின் தடுப்பூசி மருந்து வந்துள்ளன. அவை நாகர்கோவில், தக்கலையில் பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது.
4. 1,027 பேருக்கு தொற்று உறுதி
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா குறைய தொடங்கிய நிலையில் நேற்று 1,027 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி 11 பேர் பலியாகினர்.
5. பர்கூரில் போலீசார் வாகன சோதனை: பெங்களூருவில் இருந்து கடத்தப்பட்ட 1,584 மதுபாட்டில்கள் பறிமுதல்
பர்கூரில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, பெங்களூருவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 1,584 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.