ஒரே நாளில் 7,365 பேருக்கு கொரோனா தடுப்பூசி
தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 7,365 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தேனி:
தேனி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 25 இடங்களில் தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. தேனி ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் போலீசாரின் குடும்பத்தினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி தொடங்கி வைத்து பார்வையிட்டார். அங்கு நூற்றுக்கணக்கான போலீசாரின் குடும்பத்தினர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தேனியில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் தடுப்பூசி செலுத்தும் முகாம் ஒருங்கிணைக்கப்பட்டது. இதிலும் நூற்றுக்கணக்கானவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அதுபோல், மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடந்த இடங்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதனால், மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 365 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில், 5 ஆயிரத்து 520 பேர் 18 வயது முதல் 44 வயது வரையுள்ளவர்கள் ஆவார்கள். இதன் மூலம், மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 96 ஆயிரத்து 894 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், 77 ஆயிரத்து 622 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 19 ஆயிரத்து 272 பேருக்கு இரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Related Tags :
Next Story