வேதாரண்யம் அருகே சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது


வேதாரண்யம் அருகே சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 31 May 2021 9:11 PM IST (Updated: 31 May 2021 9:11 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அருகே சாராயம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கியாஸ் சிலிண்டர் மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர்.

வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே சாராயம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கியாஸ் சிலிண்டர் மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர்.
கண்காணிப்பு
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி தலைமையில் சரக போலீஸ் துணை சூப்பிரண்டின் தனிப்படை பிரிவு போலீசார் கரியாப்பட்டினத்தை அடுத்த கத்தரிப்புலம் தெற்குப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். 
போலீசார் வருவதை கண்டதும் சாராயம் காய்ச்சிய 3 பேர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். 
3 பேர் கைது
பிடிபட்ட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது42), அய்யப்பன் (47). குமரவேல் (35) என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசன், அய்யப்பன், குமரவேல் ஆகிய 3 பேரையும் கைதுசெய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து  சாராயம் காய்ச்ச பயன்படுத்திய தளவாட பொருட்கள் மற்றும் கியாஸ் சிலிண்டர், மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Next Story