தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 10 பேர் பலி


தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 10 பேர் பலி
x
தினத்தந்தி 31 May 2021 9:49 PM IST (Updated: 31 May 2021 9:50 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 10 பேர் பலியானார்கள்.

தேனி:
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரசால் தினமும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மொத்தம் 36 ஆயிரத்து 410 ஆக உயர்ந்தது. 641 பேர் குணமாகி நேற்று வீடு திரும்பினர். 6 ஆயிரத்து 228 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 10 பேர் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அதன்படி, தேனி பகுதியை சேர்ந்த 61 வயது முதியவர், 65 வயது மூதாட்டி, வடபுதுபட்டியை சேர்ந்த 63 வயது மூதாட்டி, உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த 57 வயது ஆண், கம்பத்தை சேர்ந்த 35 வயது பெண், பெரியகுளம் பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் மற்றும் 70 வயது முதியவர், ஆண்டிப்பட்டியை சேர்ந்த 55 வயது ஆண், போடியை சேர்ந்த 55 வயது பெண் மற்றும் கொடைக்கானலை சேர்ந்த 43 வயது ஆண் ஆகிய 10 பேர் உயிரை கொரோனா பறித்தது.

Next Story