மாவட்ட செய்திகள்

ஊரடங்கை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது + "||" + 9 arrested for gambling

ஊரடங்கை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

ஊரடங்கை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது
ஊரடங்கை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது
பெங்களூரு:

பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறி பாகலூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எலகங்கா-பாகலூர் மெயின் ரோடு, வினாயகாநகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அந்த கட்டிடத்தில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 9 நபா்கள் ஒன்றாக அமர்ந்து பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து, 9 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.6¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. 

கைதான 9 பேர் மீது என்.டி.எம்.ஏ. சட்டப்பிரிவின் கீழ் பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.