கர்நாடகத்திற்கு மேலும்1.64 லட்சம் டோஸ் கோவேக்சின் வந்தது
கர்நாடகத்திற்கு மேலும்1.64 லட்சம் டோஸ் கோவேக்சின் வந்தது
பெங்களூரு:
கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
மத்திய அரசு இன்று (அதாவது நேற்று) மேலும் 1.64 டோஸ் கோவேக்சின் தடுப்பூசியை கர்நாடகத்திற்கு வழங்கியுள்ளது. இத்துடன் இதுவரை 17.80 லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசி கர்நாடகத்திற்கு வந்துள்ளது.
இதில் 1.94 லட்சம் டோஸ் தடுப்பூசியை கர்நாடக அரசு தனது சொந்த செலவில் வாங்கியுள்ளது. தற்போது மாநில அரசிடம் உள்ள கோவேக்சின் தடுப்பூசி மூலம், 2-வது டோஸ் மட்டும் வினியோகம் செய்யப்படும்.
இவ்வாறு சுதாகர் கூறினார்.
Related Tags :
Next Story