மாவட்ட செய்திகள்

ஆயுதங்களால் தாக்கி வாலிபர் கொலை + "||" + Assassination of a youth with a weapon

ஆயுதங்களால் தாக்கி வாலிபர் கொலை

ஆயுதங்களால் தாக்கி வாலிபர் கொலை
ராய்ச்சூர் அருகே ஆயுதங்களால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டார். தலைமறைவான மர்மநபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
ராய்ச்சூர்:

ராய்ச்சூர் அருகே ஆயுதங்களால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டார். தலைமறைவான மர்மநபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

வாலிபர் கொலை

ராய்ச்சூர் மாவட்டம் மர்சட் கிராமத்தை சேர்ந்தவர் தாயப்பா (வயது 26). இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் படுத்திருந்தார். பின்னர் அவர் தனக்கு தூக்கம் வரவில்லை என குடும்பத்தினரிடம் கூறிவிட்டு வெளியே புறப்பட்டு சென்றார். ஆனால் நள்ளிரவு வரை தாயப்பா வீட்டுக்கு திரும்பி வரவில்லை. 
 தாயப்பாவை, அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடியும், விசாரித்து பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று காலையில் கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு கோவிலின் பின்புறம் பலத்த காயங்களுடன் தாயப்பா மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். 

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் ராய்ச்சூர் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து தாயப்பாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.


மர்மநபர்களுக்கு வலைவீச்சு

அப்போது தாயப்பாவை மர்மநபர்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி இருப்பதும், இதில், அவரது வயிறு, கழுத்து, நெஞ்சில் பலத்தகாயம் அடைந்து உயிர் இழந்ததும் தெரியவந்தது. 

வீட்டில் தூங்கிய தாயப்பாவை மர்மநபர்கள், வெளியே வரவழைத்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். 

தாயப்பாவை கொலை செய்த மர்மநபர்கள் யார்?, என்ன காரணத்திற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவில்லை.
தாயப்பாவை, அவருக்கு நெரிந்த நபர்களே கொலை செய்திருப்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். 

இதுகுறித்து ராய்ச்சூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.