கொரோனாவுக்கு தாய்-மகன் சாவு


கொரோனாவுக்கு தாய்-மகன் சாவு
x
தினத்தந்தி 31 May 2021 10:19 PM IST (Updated: 31 May 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

பீதரில் கொரோனாவுக்கு தாய்-மகன் சாவு

பீதர்:

பீதர் டவுன் பசவநகரை சேர்ந்தவர் பார்வதி சேஷப்பா பட்டீல் (வயது 55). இவரது மகன் சிவகாந்த் பட்டீல் (30). பீதரில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பார்வதி வேலை பார்த்து வந்தார். என்ஜினீயரான சிவகாந்த் பட்டீல் கனடா நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

 கடந்த சில நாட்களுக்கு முன்பு பார்வதிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.

 இதுபற்றி அறிந்த சிவகாந்த் பட்டீலும் கனடாவில் இருந்து பீதருக்கு உடனடியாக வந்தார். தாயின் இறுதி சடங்கிலும் கலந்து கொண்டார். இதற்கிடையில், சிவகாந்த் பட்டீலுக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. 

இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிவகாந்த் பட்டீல் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிர் இழந்து விட்டார். கொரோனாவுக்கு தாய் பலியானதுடன், கனடாவில் இருந்து வந்த மகனும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story