கொரோனா சிகிச்சையில் ஒரே நாளில் 580 பேர் குணமடைந்தனர்


கொரோனா சிகிச்சையில் ஒரே நாளில் 580 பேர் குணமடைந்தனர்
x
தினத்தந்தி 31 May 2021 10:25 PM IST (Updated: 31 May 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா சிகிச்சையில் ஒரே நாளில் 580 பேர் குணமடைந்தனர்

புதுக்கோட்டை, ஜூன்.1-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் ஒரே நாளில் 580 பேர் குணமடைந்தனர்.
580 பேர் குணமடைந்தனர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையில் தாக்கம் சற்று அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது. முழு ஊரடங்கை முழுமையாக கடைப்பிடித்தால் தொற்று மேலும் பரவாமலும் தடுக்க முடியும். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாகும் போது தொற்று இல்லா நிலை ஏற்படக்கூடும்.  தமிழக அரசால் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 334 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 856 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு பின் 580 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இது ஒரே நாளில் அதிகபட்ச எண்ணிக்கையாகும். மாவட்டத்தில் இதுவரை கொரோனா சிகிச்சையில் 18 ஆயிரத்து 821 பேர் குணமடைந்துள்ளனர்.
3 பேர் சாவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது 3 ஆயிரத்து 828 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்று பாதித்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயது முதியவர், 38 வயது ஆண் மற்றும் தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயது முதியவர் ஆகியோர் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 207 ஆக உயர்ந்துள்ளது.

Next Story