வயதான தம்பதிக்கு உதவிய போலீஸ் சூப்பிரண்டு
கிளியனூர் அருகே வயதான தம்பதிக்கு போலீஸ் சூப்பிரண்டு உதவினாா்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் கிளியனூரை அடுத்த ஆதனம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் (வயது 75). இவருடைய மனைவி ரங்கநாயகி (70). இவர்கள் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் இவர்கள் இருவரும் மருந்து, உணவுப்பொருட்கள் இல்லாமல் தவித்து வந்தனர். இதையறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராதாகிருஷ்ணன், ரங்கராஜனின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர்கள் இருவருக்கும் தேவையான மருந்து, மாத்திரைகள் மற்றும் மளிகை பொருட்கள், உணவுப்பொருட்கள், காய்கறி வகைகள் ஆகியவற்றை வழங்கினார்.
மேலும் அவர்கள் இருவருக்கும் வேண்டிய உதவிகளை செய்யுமாறு கிளியனூர் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் இந்த செயலை பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.
Related Tags :
Next Story