கணவன்-மனைவியாக வாழ்ந்து விட்டு திருமணத்துக்கு மறுப்பதாக ராணுவவீரர் மீது இளம்பெண் புகார்


கணவன்-மனைவியாக வாழ்ந்து விட்டு திருமணத்துக்கு மறுப்பதாக ராணுவவீரர் மீது இளம்பெண் புகார்
x
தினத்தந்தி 31 May 2021 11:02 PM IST (Updated: 31 May 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

கணவன்-மனைவியாக வாழ்ந்து விட்டு திருமணத்துக்கு மறுப்பதாக ராணுவ வீரர் மீது இளம்பெண் கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தார்.

திருவண்ணாமலை

ராணுவ வீரர் 

ஆரணி தாலுகாவை சேர்ந்த 30 வயது இளம்பெண் நேற்று அவரது தாயுடன் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு அளிக்க வந்தார். 
அப்போது அவர் கூறியதாவது:-

நானும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த வாலிபரும் காதலித்து கணவன், மனைவி போல் கடந்த 12 வருடமாக வசித்து வந்தோம். அந்த வாலிபர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

 அவர் விடுப்பில் ஊருக்கு வரும்போதெல்லாம் எனது வீட்டிற்கு வருவார். இந்த நிலையில் அவர் எங்கள் ஏழ்மையை காரணம் காட்டி தற்போது என்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். 
கொலை மிரட்டல்

மேலும் அவரது அண்ணன் மற்றும் உறவினர்களும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், ஆரணி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை. 
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளிக்க வந்ததாக கூறினார். 
பின்னர் அவர் திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமரசாமியை நேரில் சந்தித்து மனு அளித்தார். இதுகுறித்து காவல் துறை மூலம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.

Next Story