கொரோனா விழிப்புணர்வு பிரசார வாகனங்கள் தொடக்கம்


கொரோனா விழிப்புணர்வு  பிரசார வாகனங்கள் தொடக்கம்
x
தினத்தந்தி 31 May 2021 11:16 PM IST (Updated: 31 May 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா விழிப்புணர்வு பிரசார வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டது

அரவக்குறிச்சி
கரூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்ய வாகனங்களை அரவக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. பி.ஆர்.இளங்கோ கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.மணியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) கனகராஜ், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஸ்டி மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டானர்.

Next Story