அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு


அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 31 May 2021 11:19 PM IST (Updated: 31 May 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி அருகே அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

இளையான்குடி,

இளையான்குடி அரசு தலைமை மருத்துவமனையில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி திடீர் ஆய்வு செய்தார். மருத்துவமனையின் உள்நோயாளிகள் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, மாத்திரைகள் வழங்கும் இடம், சித்தா மருத்துவமனை ஆகிய பகுதிகளை ஆய்வு செய்து பணியில் உள்ள டாக்டர்களிடம், சுற்று வட்டாரத்தில் அதிக அளவில் கிராமங்கள் உள்ளதால் மருந்து, மாத்திரைகள் கையிருப்பில் வைத்துக் கொள்ளவும், ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அதோடு கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சைக்கு வரும் போது, அவர்களது உறவினர்களை ஆஸ்பத்திரி வளாகத்தில் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ஆய்வின் போது இளையான்குடி தாசில்தார் ஆனந்த், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேசவன், ராஜேஸ்வரி, ஒன்றிய சேர்மன் முனியாண்டி மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தார்கள்.

Next Story