நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பெண்கள் உள்பட 8 பேர் பலி


நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பெண்கள் உள்பட 8 பேர் பலி
x
தினத்தந்தி 31 May 2021 5:51 PM GMT (Updated: 31 May 2021 5:51 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 5 பெண்கள் உள்பட 8 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.

நாமக்கல்:
பலி எண்ணிக்கை அதிகரிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருவது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது. சுகாதாரத்துறை அறிவிப்பின் படி நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 240 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர்.
இந்தநிலையில் பள்ளிபாளையம் அக்ரஹாரம் தில்லைநகரை சேர்ந்த 40 வயது பெண் கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி, மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
8 பேர் சாவு
இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த பெரியகொல்லப்பட்டி, வள்ளிபுரம், ஆவாரங்காடு, களங்கானி, நாமகிரிப்பேட்டை, நாமக்கல், அரசநத்தம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 7 பேர் பலியாகினர்.
நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு நாமக்கல் மாவட்டத்தில் 5 பெண்கள் உள்பட மொத்தம் 8 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 248 ஆக அதிகரித்து உள்ளது.

Next Story