நாமக்கல்லில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம்
நாமக்கல்லில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 31 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது தினமும் 800 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால், மாவட்ட நிர்வாகம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பில் நாமக்கல் மணிக்கூண்டு, கலெக்டர் அலுவலகம் பகுதிகளில் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று ஒருங்கிணைந்த பெயிண்டர்கள் நலச்சங்கம் சார்பில் நாமக்கல் போலீஸ் நிலையம் முன்பு கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது. இந்த பணியில் சுமார் 10 பெயிண்டர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story