வேலகவுண்டம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த நரி உயிருடன் மீட்பு
வேலகவுண்டம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த நரி உயிருடன் மீட்கப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூர் கிழக்கு ஏரிக்கரை அருகில் உள்ள சுமார் 40 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் நரி ஒன்று தவறி விழுந்து விட்டது. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து நிலைய அலுவலர் ராஜேஸ்வரன் தலைமையில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் கயிறு மூலம் கிணற்றில் இறங்கி நரியை உயிருடன் மீட்டனர். பின்னர் அந்த நரி வனச்சரகர் பெருமாளிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் அந்த நரியை காப்புக்காடு பகுதியில் கொண்டு போய் விட்டனர்.
Related Tags :
Next Story