மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு பெண் உள்பட 2 பேர் பலி + "||" + corona

கொரோனாவுக்கு பெண் உள்பட 2 பேர் பலி

கொரோனாவுக்கு பெண் உள்பட 2 பேர் பலி
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக பெண் உள்பட 2 பேர் இறந்தனர். மேலும் 181 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக பெண் உள்பட 2 பேர் இறந்தனர். மேலும் 181 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் குறைந்தது

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. தமிழக அரசும் வருகிற 7-ந்தேதி வரை தளர்வில்லா முழு ஊரடங்ைக அமல்படுத்தியது.

 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் வெளியே நடமாடுவதை குறைத்தனர். வெளிமாவட்டத்தில் இருந்து இ-பதிவு இல்லாமல் வந்த வாகனங்களையும், அனுமதியின்றி ஊர் சுற்றிய வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். சுகாதார பணியாளர்களும், மருத்துவத்துறையினரும் விரைந்து செயல்பட்டதால் மாவட்டத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கியது. நேற்று முன்தினம் 211 பேருக்கு கொரோனா ெதாற்று இருந்தது. அது மேலும் குறைந்து நேற்று 181 பேருக்கு புதிதாக தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

2 பேர் பலி

அதே நேரத்தில் கொரோனா ெதாற்று குறைய தொடங்கிய வேளையில் நேற்று 2 பேர் பலி இருப்பது வேதனை தரும் நிகழ்வாக தான் உள்ளது. கொரோனா பாதித்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 56 வயதான பெண் ஒருவர் சிவகங்கையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதே போல் காரைக்குடி அமராவதிபுதூரில் 35 வயதான ஆண் ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

152 பேர் குணம் அடைந்தனர்

மேலும் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 1,981 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.நேற்று ஒரே நாளில் 152 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

தொடர்புடைய செய்திகள்

1. 164 பேருக்கு கொரோனா; 2 பேர் மட்டுமே உயிரிழப்பு
மதுரையில் நேற்று புதிதாக 164 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது
2. கரூர் மாவட்டத்தில் புதிதாக 132 பேருக்கு தொற்று
கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று மேலும் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். புதிதாக 132 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
3. கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியானார்கள். புதிதாக 234 பேருக்கு பாதிப்பு உறுதியானது.
4. கரூர் மாவட்டத்தில் புதிதாக 110 பேருக்கு தொற்று
கரூர் மாவட்டத்தில் புதிதாக 110 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
5. புதிதாக 162 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.