மாவட்ட செய்திகள்

காரைக்குடி பகுதியில் கிருமிநாசினி தெளிப்பு தீவிரம் + "||" + Disinfectant spray

காரைக்குடி பகுதியில் கிருமிநாசினி தெளிப்பு தீவிரம்

காரைக்குடி பகுதியில் கிருமிநாசினி தெளிப்பு தீவிரம்
காரைக்குடி பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம் அடைந்தது.
காரைக்குடி,

 கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய துறைகள் சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கிருமி நாசினி தெளித்தல், கபசுர குடிநீர் வழங்குதல், தடுப்பூசி முகாம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, சிவகங்கை, தேவகோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பஸ் நிலையம், சந்தை நடைபெறும் இடங்கள், சாலையோரம், குடியிருப்பு பகுதிகள், கொரோனா பரவல் அதிகம் உள்ள இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்றது.

 காரைக்குடி நகராட்சி ஆணையாளர் லெட்சுமணன் தலைமையில் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் ரவிசங்கர், பாஸ்கரன், சுந்தர் ஆகியோர் மேற்பார்வையில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் வாகனங்களில் சென்று புதிய பஸ் நிலையம், செக்காலை சாலை, பழைய மருத்துவமனை பகுதி, ரெயில்வே பகுதி, கல்லூரி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.தொடர்புடைய செய்திகள்

1. கிருமிநாசினி தெளிப்பு
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
2. மணல்மேடு பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பு - தீயணைப்பு நிலையம் சார்பில் நடந்தது
மணல்மேடு பகுதிகளில் தீயணைப்பு நிலையம் சார்பில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்தது.
3. வாக்குச்சாவடியாக செயல்பட்ட பள்ளிகளில் கிருமிநாசினி தெளிப்பு தீவிரம்
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட்ட பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.