கரூர் தேசிய நெடுஞ் சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படுமா?
கரூர் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
கரூர்
குடிநீர் தொட்டிகள்
கரூரில் உள்ள கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள், பஸ்கள், கார்கள் உள்ளிட்ட 4 சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் அதிக அளவில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் நெடுந்தூரம் இந்த சாலையில் பயணம் செய்யும் பயணிகளின் மற்றும் லாரி ஓட்டுனர்கள் ஆகியோரின் குடிநீர் தேவையை போக்கும் வகையில் சாலையோரங்களில் ஆங்காங்கே தொட்டிகள் அமைத்து அதில் தண்ணீர் நிரப்பப்பட்டு வாகன ஓட்டிகள் அதை பயன்படுத்தி வந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக அந்த தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் நெடுந்தூரம் பயணம் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எதிர்பார்ப்பு
தற்போது கோடைகாலம் என்பதால் வெயில் அதிகமாக உள்ள நிலையில் சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படுமா என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story